தண்டனை பெற்ற இரணைமடுவைச் சேர்ந்த கைதி ஒருவர் களுவாஞ்சிக்குடி நீதிமன்றிலிருந்து தப்பி ஓட்டம்
Share
(கனகராசா சரவணன்;)
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற வளாகத்தில் மலசலம் கழிக்க சென்ற தண்டனை பெற்ற கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் 26-08-2024 அன்று திங்கட்கிழமை பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு உட்பட பல இடங்களில் கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற தண்டணை வழங்கப்பட்டு மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய கைதியை சம்பவதினமான இன்று களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக சிறைக்காவலர்கள் அழைத்துச் சென்று அங்குள்ள கூண்டில் அடைத்து வைத்தனர்.
இந்த நிலையில் குறித்த கைதி பகல் 12 மணியளவில் கூண்டில் இருந்து மலசலம் கழிப்பதற்காக சிறைக்காவலர் அழைத்து சென்று மலசலம்கழிப்பதற்கு விட்டுவிட்டு வெளியில் காவல் இருந்துள்ள நிலையில் கைதி மலசல கூரையை கழற்றி அதனூடாக தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து பொலிசாரும் சிறைக்காவர்களும் அவரை வலைவீசி தேடிவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.