LOADING

Type to search

கனடா அரசியல்

நோபல் பரிசுவென்ற கனடிய இயற்பியல் பேராசிரியர்- ஆர்தர் புரூஸ் மெக்டொனால்டு

Share

கனடாவின் இயல்பியல் அறிஞரும் நோபல் பரிசு வெற்றியாளருமான பேராசிரியர் ஆர்தர் புரூஸ் மெக்டொனால்ட் ஆகஸ்ட் 29 அன்று 82-ஆவது அகவையை எட்டுகிறார்.

கனடாவின் உதயன் வார இதழும் அதன் இணையதளமும் இவரை வாழ்த்தி மகிழ்கிறன.

நியூத்திரினோ அலைவுகளைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கும், சப்பானைச் சேர்ந்த தக்காக்கி கஜித்தாவுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கனடா, ஒன்றாரியோவைச் சேர்ந்த இவர், 1943ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்தவர்.

கலிபோர்னிய டல்கௌசி பல்கலைக்கழகத்தில் பயின்ற காலம் முதல், இவர் வானியல் மற்றும் இயல்பியல்மீது அதீத நாட்டமும் ஆராய்ச்சிப் பாங்கும் கொண்டு திகழ்கிறார்.

தற்பொழுது ஓய்வு பெற்றிருந்தாலும் அரச சமூகக் குழுவழி சுறுசுறுப்புடன் இயங்கிவருகிறார்.

கனடா உதயன் இதழ், மீண்டும் இவரை வாழ்த்துகிறது!