LOADING

Type to search

கனடா அரசியல்

COSMIC RHYTHM, a ‘Journey Through Dasavatharam’, a Fantastic and Colorful Feature Production of very talented Choreographer and Dancer, Madurai R. Muralidaran was presented to Canadian Audience, by Niro Dance Creations in Scarborough Canada.

Share

மதுரை ஆர். முரளிதரன் அவர்களின் தயாரிப்பிலும் நடனம் சார்ந்த நுட்பமான கவனிப்பிலும் உருவான COSMIC RHYTHM, a ‘Journey Through Dasavatharam’ கனடாவில் மேடையேறியது

உலகப் புகழ்பெற்ற நடனக் கலைஞரும் பரதநாட்டிய விற்பன்னருமான மதுரை ஆர். முரளிதரன் அவர்களின் தயாரிப்பிலும் நடனம் சார்ந்த நுட்பமான கவனிப்பிலும் உருவான COSMIC RHYTHM, a ‘Journey Through Dasavatharam’ என்னும் அற்புதமானதும் அழகியதுமான நாட்டிய நாடகம் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி கனடா- ஸ்காபுறோ- நகரில் அமைந்துள்ள ஆர்மேனியன் கலாச்சார மண்டபத்தில் மேடையேறியது.

கனடாவில் புகழ்பெற்ற நடனக் கல்லூரியான நிரோ டான்ஸ் கிரியேசன்ஸ் மற்றும் அதன் நிறுவனர் நிரோதினி பரராஜசிங்கம் அவர்களின் மேற்பார்வையில் அவரது மாணவிகளின் பங்களிப்போடு இந்த நாட்டிய நாடகம் அன்றைய தினம் மண்டபத்தில் நிறைந்திருந்த சபையோரை மகிழ்வித்தது என்றால் அது மிகையாகாது.

மிகுந்த பொருட்செலவுடனும் நாட்டிய நாடகத்தில் பங்குபற்றி நடனமணிகளின் ஒத்தழைப்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த இந்த மேடைப்படைப்பு கனடாவின் கலா ரசிகர்களுக்கும் நடனத்தின் மூலம் தெய்வீகத்தின் மகிமையைப் புரிந்தும் அனுபவித்தும் மகிழ்வதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது என்றாலும் அது மிகையாகாது.

மேற்படி நாட்டிய நாடகத்தில்
Matsya (மத்ஸ்யா) – The Fish Avatar
Kurma (கூர்மா) – The Tortoise Avatar
Varaha (வராகா) – The Boar Avatar
Narasimha (நரசிம்மா) – The Half-Man Half-Lion Avatar
Vamana (வாமனா) – The Dwarf Avatar
Parashurama (பரசுராமா) – The Axe-Wielding Avatar
Rama (ராமா) – The Prince of Ayodhya Avatar
Krishna (கிருஷ்ணா) – The Divine Prince Avatar
Balarama ( பலராமர்) – The Enlightened One Avatar
Kalki (கல்கி) – The Destroyer of Evil Avata ஆகிய பத்து அவதாரங்களையும் எந்தெந்த காலங்களில்
எந்தெந்த நோக்கங்களோடு விஸ்ணுப் பெருமான் எடுத்தார் என்பதை கலைத்துவமாக மேடையில் சமர்ப்பணம் செய்த முறையையும் யுக்தியும் பாராட்டுகளைப் பெற்றன.

இந்த அற்புதமான படைப்பை மேடையேற்றுவதற்கு உதவிய வர்த்தகப் பெருமக்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் புகைப்படப்பிடிப்பாளர்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பெற்று பாராட்டுக் கேடயங்களும் வழங்கப்பெற்றன.

OSMIC RHYTHM, a ‘Journey Through Dasavatharam’, என்னும் இந்த அற்புதமான படைப்பில் பங்குபற்றிய அனைத்துக் கலைஞர்களுக்கும் மதுரை ஆர் முரளிதரன் அவர்களுக்கும் திருமதி நிரோதினி பரராஜசிங்கத்திற்கும் சபையோர் கரகோசம் செய்து தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.