LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாருமே பொறுப்பேற்காத என்னை கருணைக் கொலை செய்யுங்கள் – முதியவர் ஒருவர் உருக்கமான கோரிக்கை!

Share
பு.கஜிந்தன்
நோய் வாய்ப்பட்டு ஒரு காலை இழந்து, எந்தவொரு முதியோர் இல்லத்தாலும் பொறுப்பேற்கப்படாத நிலையில் உள்ள என்னை, குறைந்த பட்சம் கருணைக் கொலையாவது செய்யவேண்டும் என்று முதியவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இளையதம்பி ஜெயக்குமார் என்ற அந்த முதியவர் தற்போது, மானிப்பாய் வீதியில் உள்ள உதயதாரகை சன சமூக நிலையத்தில் தஞ்சமடைந்துள் ளார். ஒரு காலில்லாத நிலையில் உள்ள அவரைப் பொறுப்பேற்பதற்கு எந்தவொரு முதியோர் இல்லங்களும் இதுவரை முன் வரவில்லை.
இதையடுத்து, கிராம மக் கள் இணைந்து கிராம அலுவலருக்கு எழுதிய கடிதத்தின் விளைவாகவும், தொடர் நடவடிக்கைகள் காரணமாகவும் அந்த முதியவரை, பொருத்தமான முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டும் என்று ஜே/88 கிராம அலுவலர் பிரிவின் கிராம அலுவலர் சிபாரிசு செய்திருந்தார்.
எனினும், எந்தவொரு முதியோர் இல்லங்களும் அவரைப் பொறுப்பேற்க முன்வராததைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர் பளை யிலுள்ள முதியோர் இல்லத்தில் அந்த முதியவரை இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் வழங்கியுள்ளார்.
நீண்ட நாள்களாக அல்லலுற்றுக் கொண்டிருந்த முதியவருக்கு தங்க ஓரிடம் கிடைத்தமையே போதும் என்ற நிலையில், கிராம மக்கள் இணைந்தும் பெரும் நிதிச் செலவில் அந்த முதியவரை பளையிலுள்ள மேற்படி முதியோர் இல்லத்துக்குக் கொண்டுசென்றனர். எனினும், அங்கும் அவருக்கு இடம் வழங்கப்படாததையடுத்து, அவர் மீண்டும் மீண்டும் உதய தாரகை சனசமூக நிலையத்தில் தஞ்ச மடைந்துள்ளார்.
இதையடுத்தே அவர், எந்தவொரு முதி யோர் இல்லங்களோ, அமைப்புகளோ அல்லது நிறுவனங்களோ பொறுப்பேற்காத பட்சத்தில் குறைந்தபட்சம் தன்னைக் கருணைக் கொலையாவது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது கடிதத்தின் பிரதிகளை அவர், வடக்கு மாகாண ஆளுநருக்கும். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளருக்கும், கொட்டடி கிராம அலுவலருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.