LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடமாகாண மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழா!

Share

பு.கஜிந்தன்

புதிய வாழ்வு நிறுவனமும், சாவிகா சங்கீத அறிவாலயமும் இணைந்து நடாத்திய வடமாகாண மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழாவானது அண்மையில் ராஜா சரஸ்வதி மண்டபத்தில், புதிய வாழ்வு நிறுவனத்தின் இணைப்பாளர் திரு.விஜயகுமார் விஜயலாதன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் மதிப்பிற்குரிய திரு.இலட்சுமணன் இளங்கோவன், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. வி.பி.பாலசிங்கம், மதிப்பிற்குரிய முனைவர் திரு.திருநாவுக்கரசு கமலநாதன் ( யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் முதலாவது பீடாதிபதி ) , கௌரவ மருத்துவ கலாநிதி திரு.திருமதி. ஜெயதேவி கணேசமூர்த்தி ( ஜெய்ப்பூர் மாற்றுவலுவுடையோரக்கான புனர்வாழ்வு நிலையத்தின் தலைவர்) , சட்டவியல் நிபுணர் திரு.ஜனகன் முத்துகுமார் , மற்றும் மதிப்பிற்குரிய திருமதி. வி். சிவகுமார் ( ஸ்தாபகர் ஆறுமுகம் விசாகரட்ணம் அறக்கட்டளை) ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

காலை 9 .00மணி அளவில் ஆரம்பித்த இந்த நிகழ்வு மதியம் 1.00 மணி வரை தொடர்ச்சியாக இடம்பெற்றது. இதில் சாவிகா சங்கீத அறிவாலயம் மற்றும் புதிய வாழ்வு நிறுவன இயக்குனர்கள், தன்னார்வலர்கள் ,மாற்றுத்திறனாளிக் குழந்தைகள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் இசைப்போட்டியில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசில் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.