யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பிரச்சார கூட்டம்!
Share
இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானம் மாற்றத்திற்கு எதிரான ஒரு தீர்மானமாக மாறியது ஏன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் பிரசாரம் கூட்டம் 07-09-2024 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்வரும் விடயங்களை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கா முன்வைத்து தனது உரையை ஆற்றினார்.
1.ஜனாதிபதி இலங்கையின் அடிப்படை சட்டத்தினை மீறுகின்றார், அவர் நீதிமன்றத்தை மதிப்பதில்லை
2.தெற்கில் மக்கள் ஒன்றுதிரண்டு நிற்கின்றார்கள் ஆகவே வடக்கு மக்களிடம் கேட்கின்றோம் நீங்களும் மாற்றத்தின் பக்கம் வாருங்கள்
3.நாட்டால் அனைத்து மக்களின் ஆதரவுடன் ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு
4.சுமந்திரன் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கிய ஆதரவை நாங்கள் இனவாதமாக நினைக்கமாட்டோம்.