LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ் மக்கள் அனுராவுக்கு வாக்களிக்குமாறு ‘மாற்றத்துக்கான தமிழ் மக்கள்’ அமைப்பு கோரிக்கை

Share

((கனகராசா சரவணன்) )

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசாநாயக்க ஆதரவு வழங்கி வாக்களிக்க வேண்டும் என மாற்றத்துக்கான தமிழ் மக்கள் அமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (08) கோரிக்கை விடுத்துள்ளதுடன் நாங்களும் ஆதரவு வழங்குவதாக அதன் தலைவர் சுப்பிரமணியம் கமலேஷ்வரன் (கமலி) தெரிவித்தார்

மட்டு ஊடக அமையத்தில் 08-09-2024 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் தற்போது மக்கள் மத்தியில் மாற்று அரசியலை கொண்டு வரவேண்டிய தேவை இருக்கின்றது அதனடிப்படையில் நாங்கள் தன் எழுச்சியாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்

நாடு சுதந்திரமடைந்த பின்னர் அரசியல் காரணங்களுக்காக ஜே.வி.பி புரட்சியின் பின்னர் தமிழ் தேசிய போராட்டம் ஏற்பட்டது இற்கு எல்லாம் இந்த நிர்வாககட்டமைப்பு (சிஸ்ரம்) தான் காரணம் எனவே இது மாற்றப்படவேண்டும். எனவே இந்த வாக்குவங்கி அரசியல் இலாபகரமான சூழலாக மாறியதுதான் காரணம் இதனை நாங்கள் தொடரமுடியாது இதனை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்

எனவே இந்த பாரம்பெரிய அரசியலை தோற்கடிக்க இந்த ஜனாதிபதி வேட்பாளர் அனுரவை கொண்டுவரவேண்டும் அதற்காக வாக்களியுங்கள். எனவே இது அரசியல் இலாபத்துக்காக தூண்டப்படுகின்ற பிரச்சனை நாட்டை பிரித்து கொடுத்தாலும் தமிழ் சிங்களம் என சண்டை பிடிக்கத்தான் போகின்றனர் எனவே தீர்வு என்றதை விட ஜே.வி.பி கட்சி இந்த நாட்டில் ஒரு சமத்துவத்தை வழங்குவதன் மூலம் இனவாதத்தை நிற்பாட்ட முடியும்.

ஒரு இன மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கான குடியேற்ற திட்டமும் சரி இருக்கின்றதை அழிப்பதும் ஒரு இனழிப்புதான். அதேவேளை வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமா என சந்தேகம் இருக்கின்றது அதேவேளை ஜே.வி.பி வடக்கு கிழக்கை பிரித்ததில் எனக்கு உடன்பாடு இல்லை மாகாணசபை முறைமையை ஜே.வி.பி. ஏற்றுக் கொண்டுள்ளது ஜே.வி.பி. ஜனநாயகமுறையை பின்பற்றும் நிலைக்கு வந்துள்ளது எனவே வடகொரியாவை வைத்துக் கொண்டு அந்த முகத்தை பார்க்கவேண்டாம் ஆகவே தமிழ் மக்கள் அனுரவுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்