LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஜெனீவா கூட்டத்தொடரில் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகள்

Share

(09-09-2024)

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்காக வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா தலைமையிலான குழு சென்றுள்ளனர்.

அவர்கள் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜெனிவாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

குறித்த குழுவில் வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்க உப செயலாளர் மற்றும் வவுனியா மாவட்ட தலைவி ஆகியோர் விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத் தொடர் 9ம் திகதி அன்று முதல் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

‘இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் தற்போது வரையிலான உள்நாட்டு மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பாக அமர்வின் முதல் நாளான 9ம் திகதி பிற்பகல் 12.30 மணிக்கு இலங்கை குறித்த விவாதமும் இடம்பெற்றது.

பிற்பகல் வரை நடைபெற்ற இந்த விவாதத்துக்கு பின்னர் 5 மணிக்கு இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் பக்க நிகழ்வொன்றுக்கும் ஏற்பாடாகியுள்ளது.