கனடா- பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் விசு கணபதிப்பிள்ளையின் நிதி அனுசரணையில் பாடசாலை மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள்
Share
கனடா- பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகரும் சமூக சேவையாளருமான விசு கணபதிப்பிள்ளையின் நிதி அனுசரணையில் பாடசாலை மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள் அண்மையில் கல்முனை துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அதிபர் R செந்தில் தலைமையில் இடம்பெற்ற விழாவொன்றில் நிறைவேற்றப்பட்டன.
கனடாவில் வசிக்கும் உதவும் பொற்கரங்களின் ஸ்தாபகர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களின் பூரண நிதி அனுசரனையில் பாடசாலை மாணவர்களுக்கான கழுத்துப்பட்டி மற்றும் மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைவழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உதவும் பொற்கரங்களின் ஸ்தாபகர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் சார்பாக வருகை தந்த திருமதி .ஜெயந்தி கனகசூரியம் அவர்களும் , விசேட அதிதிகளாக பாடசாலையின் EPSI இணைப்பாளர் ஜனாப். அப்துல் ஹபில் அவர்களும் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களான K. சாந்தகுமார், M.லக்குணம்.அவர்களும் மற்றும் பழைய மாணவர்கள், கோயில் தலைவர் , பெற்றோர்கள், நலனவவிரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மிகவும் அழகிய முறையில் ஏற்பாடு செய்யப்பெற்ற இந்த விழாவின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் தொடர்ச்சியாக பல நற்காரியங்களை செய்து வரும் உதவும் பொற்கரங்களின் ஸ்தாபகர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கனடா மனிதநேயக் குரல் அமைப்பினர் தமது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றனர்.
ARJUNE-Local Journalism Initiative Reporter.- 2