LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்நகரில் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் இரு நூல்கள் வெளியீட்டு விழா..!

Share

பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் இரு நூல்கள் வெளியீட்டு விழா, யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபத்தில் 15 -ம் திகதி (15 – 09 – 2024) ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில்,
டமாகாணப் பிரதம செயலாளர் இ. இளங்கோவன் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

நிகழ்வில் வரவேற்புரையை டானியல் வசந்தனும், வாழ்த்துரையை வட இலங்கைச் சர்வோதய அறங்காவலர் செல்வி பொன். ஜமுனாதேவியும் வழங்குவர்.

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் த. அஜந்தகுமார், கலாநிதி எஸ். குணேஸ்வரன், உடுவில் அரவிந்தன். எம். மயூரன், சபா தனுஜன் ஆகியோர் நூல்கள் குறித்துக் கருத்துரை வழங்குவர்.

ஏற்புரையை நூலாசிரியர் வி. ரி. இளங்கோவன் நிகழ்த்துவார்.
நிகழ்ச்சியை மாதவி உமாசுதசர்மா தொகுத்து வழங்குவார்.

‘இளங்கோவன் படைப்புகள், ஈழத்து இலக்கியச் சிற்பிகள்’ ஆகிய நூல்களே வெளியிடப்படவுள்ளன.

“இளங்கோவன் படைப்புகள்” 874 பக்கங்கள் கொண்ட பாரிய தொகுப்பாகும். இத்தொகுப்பில் ‘சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், தமிழர் மருத்துவம் – நோய் நீக்கும் மூலிகைகள், நேர்காணல்கள், முன்னுரைகள் உட்படப் பல விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

‘இளங்கோவன் படைப்புகள்’ நூலைக் கொழும்பு ஞானம் பதிப்பகமும், ‘ஈழத்து இலக்கியச் சிற்பிகள்’ நூலைக் கே. டானியல் பதிப்பகமும் பதிப்பித்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.