LOADING

Type to search

இலங்கை அரசியல்

கீரிமலை பிரதேசத்தில் பாரிய அளவிற்கு நிலம் பறிபோகும் அபாயம். இரகசியமாக அளவீடுகள் முடிந்தன.

Share

(கனடா உதயன் பிரத்தியேகச் செய்தி)
நடராசா லோகதயாளன்

யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகைப் பிரதேசம் சடையம்மா சமாதியுடன் சுவீகரிக்கும் நோக்கில் இரகசியமான முறையில் நில அளவீடு மேற்கொண்டு வரைபடம் பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கீரிமலையில் பொது மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையும் அதனை அண்டிய நிலம் முழுவதனையும் நில சுவீகரிப்பின் முதல் அங்கமாக அப் பகுதியை
நில அளவைத் திணைக்களத்தின் தலைமைப் பணிமனை அதிகாரிகள் கொழும்பில் இருந்து வருகை தந்து அளவீட்டினை மேற்கொண்டு அதன் வரை படத்தினை தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் தற்போது கையளித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை உள்ளடங்களாக 6 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு அப்பகுதி காணிகளின் பெயர் பொன்னுப்புதுக்காடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலத்தின் உரிமையாளர்களை தெரியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அரச காணிகளும் உள்ளடங்குவதாகவும் காணிகளின் எல்லைகள் படை முகாம் எனவும. குறப்பிடப்பட்டு 2024-08-29 அன்று நில அளவைத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஒப்பமிட்டுள்ளார்.

கீரிமலை ஜனாதிபதி மாளிகை தனியார் பல்கலைக் கழகத்திற்கு வழங்க ஏற்கனவே இரகசியமான முறையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பின்பு சுவீகரிப்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம் தையிட்டி விகாரைப் பகுதி இரகசியமாக அளவீடு செய்து வரைபடம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.