LOADING

Type to search

இலங்கை அரசியல்

கட்சியின் கேடயத்தை இழந்தார் கிளிநொச்சி சந்திரகுமார்

Share

நடராசா லோகதயாளன்

சந்திரகுமார் தலைமையிலான அரசியல கட்சியின் பதிவு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சியானது 3 வருடங்களின் முன்பு ஓர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல்கள் ஆணைக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கடசியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலம் முதல் இன்றுவரை கட்சியின் நிதி அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கட்சி சமர்ப்பிக்கவில்லை. கணக்கு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு 3 தடவைகள் கடிதம் அனுப்பியும் பதில் அளிக்காத காரணத்தினாலேயே தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு சமத்துவக் கட்சியின் பதிவினைநீக்கியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் ஜனாதிபதித் தேர்தலிற்காக 2024-07-29 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச இதழில் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் சமத்துவக் கட்சி உட்பட 78 கட்சிகளின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. இதேநேரம் எம்பிலிப்பிட்டிய உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பின் பின்னர் 2024-08-26 அன்று தேர்தல்கள் ஆணைக் குழுவினால் வெளியிட்ட 2399/14 இலக்க அரச இதழில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் சமத்துவக் கட்சியின் பெயர் நீக்கப்பட்டு 77 அரசியல் கட்சியின் பெயர் பட்டியலே வெளியிடப்பட்டுள்ளது.

முருகேசு சந்திரகுமார் தலைமையிலான அரசியல் கட்சி ஏற்றுக்கொள்ளப்பட்டு
அதன் சின்னமாக கேடயம் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.