LOADING

Type to search

இலங்கை அரசியல்

மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடையை பயன்படுத்தும் பிரித்தானியா

Share

இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை முன்னேற்ற வேண்டும் என்ற தங்களின் இலக்கை அடைவதற்கு உதவியாக இருக்குமாக இருந்தால், மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்பு பட்டவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை பயன்படுத்தப்படும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றில், தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார செயலாளர் கெதரின் வெஸ்ட், இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இலங்கையானது, மனித உரிமைகள் விடயத்தில் பிரித்தானியா முக்கியத்துவம் வழங்கும் நாடாக இருக்கிறது.

பிரித்தானியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளின் அடிப்படையில், பொருளாதாரத் தடையை ஏற்படுத்துவதன் ஊடாக ஒருநாட்டின் மனித உரிமைகள் உள்ளிட்ட நிலவரங்களில் முன்னேற்றம் ஏற்படுமாக இருந்தால் அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியும்.

ஆனால் எதிர்காலத்தில் இலங்கையர்களில் குறிப்பிட்ட சிலருக்கு எதிராக இப்பொருளாதாரத் தடையைப் பயன்படுத்த முடியுமா என்று அனுமானத்தின் அடிப்படையில் பதில்களை வழங்க முடியாது.

அவ்வாறு செய்வதனால் இது பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் பிரித்தானியாவினால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் சாத்தியம் இருக்கிறதா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் கேள்வி எழுப்பியிருந்தார்.