இந்த தேர்தலை பகிஸ்கரிப்பதன் மூலம் தமிழ் மக்கள் இந்த முறைமையை ஏற்கத் தயார் இல்லை என செய்தியை உலகிற்கு சொல்வோம்– நா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Share
(கனகராசா சரவணன்)
தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் ஊடாக சிங்கள தேசத்தினுடைய அரசியல் அமைப்பை சிங்கள தேசத்தினுடைய அந்த வட்டத்துக்குள் நாங்;களும் இருக்கின்றோம் என்பதுடன் தமிழ் தேசிய அரசியலை சிங்கள தேசியவாதத்துக்குள் முடக்கும் செயற்பாடு எனவே இந்த தேர்தல் தமிழ் மக்களுடன் சம்மந்தப்பட்ட தேர்தல் அல்ல இந்த தேர்தலில் எதுவுமே சாதிக்க முடியாது சாதிக்க கூடிய ஒன்றே ஒன்று உலகத்துக்கு தமிழ் மக்கள் இந்த முறைமையை ஏற்க தயார் இல்லை இனிமேலும் ஏமாறுவதற்கும் தயாரில்லை என்ற செய்தியை தேர்தலை முழுமையாக பகிஸ்கரிப்பதன் ஊடாக நிலைநாட்டமுடியும் என நா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பம் தனது கொழும்பு வீட்டில் 16-09-2024 அன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஒரு சில மாதங்களாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தங்களது நிலைப்பாட்டை தெளிவாக மக்களுக்கும் சர்வதேச மட்டத்திற்கும் அறிவித்திருந்தோம். இந்த பேர் முடிவுற்றுள்ள காரணத்தால் தமிழ் தேசிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் மக்கள் தமிழ் தேசியவாதத்தை கைவிடுவார்கள் என்ற சிங்கள தேசம் அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை இருக்கின்ற நிலையிலே அந்த கனவு இலங்கைதீவு வெறும் சிங்கள பௌத்த மக்களுக்கு சொந்தம் தமிழ் தேசத்திற்கு இடமே இல்லை என்ற நிலமையை தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ளகூடிய ஒரு சூழலை இந்த இனழிப்பான பேருக்கு பின்னர் நிறைவேற்றலாம் என்ற கருத்தை 2009 ம் ஆண்டில் பேர் முடிவுக்கு வந்த காலத்திலிருந்து கொள்கை ரீதியாக மக்களுக்கு தெளிவுபடுத்தி வருகின்றோம்.
அதேவேளை சிங்கள தேசியவாதம் தமிழ் தேசியத்தை முற்றுமுழுதாக அழிக்கலாம் என்று நம்பி இருக்கின்ற ஒரு சூழலிலே அந்த தத்துவத்துக்கு ஒரு நெருக்குதல் கொடுக்க கூடிய ஒரு சூழல் தமிழ் தேசியம் வலியுறுத்துகின்றது தமிழ் தேசியத்தை அழிக்கின்ற சிங்கள தேசியத்தை நிராகரித்து தமிழ் தேசியவாதத்தை வலியுறுத்துகின்ற ஒரு நிலைப்பாட்டை உறுதியாக கடைப்பிடிப்பதன் ஊடாக மட்டும் தான் அந்த அழுத்தம் உருவாகும் என தெரிவித்து வருகின்றோம்.
பேர் முடிந்த சூழலிலே தமிழ் மக்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்படுத்தாமல் அதாவது ஒரு தேர்தலில் வருகின்ற போது அதில் தமிழ் மக்களுக்கு பிரதிநிதித்துவம் வரக்கூடிய அந்த பிரதிநிதித்துத்;தை இழக்காமல் அதே நேரம் எமது தேசிய நிலைப்பாட்டை வலியுறுத்தியும் சிங்கள தேசியவாத போக்கை நிராகரித்தும் வெளிக்காட்டக்கூடிய ஒரே ஒரு தேர்தல் இந்த ஜனாதிபதி தேர்தல்.
பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் சிங்கள தேசியவாதம் ஊடாக உருவாக்கப்பட்ட ஒரு தேர்தல் முறையை இருந்தாலும் கூட அதில் பிரதிநிதித்துவத்தை முற்று முழுதாக இழக்கவேண்டிவரும் அதேபோன்று உள்ளுராட்சி தேர்தலிலும் அந்த பிரதிநிதித்துவம் இழக்கவேண்டிவரும். ஆப்படிப்பட்ட ஒரு நிலையிலே ஜனாதிபதி தேர்தல் மட்டும்தான் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படாது நன்மமையும் வரப்போவதில்லை சிங்களதேசத்தில் ஆட்சிக்கு வரப்போகின்ற அனைத்து தரப்புக்களும் தமிழ் தேசியத்தை நிராகரித்து கொண்டிருக்கும்.
ஓற்றையாட்சியை வலியுறுத்திகின்றனர் அப்படிப்பட்ட சூழலில் யார் போட்டியிட்டு யார் வந்தாலும் தமிழ் தேசியவாதத்திற்கு வரக்கூடிய நெருக்கடி நிரந்தரம் அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை அப்படிப்பட்ட ஒரு சூழலிலே சிங்கள தேசியவாதம் ஒரு உச்சத்திலே இருக்கின்ற ஒரு தேர்தல் முறையிலே தமிழ் தேசியவாதம் அதற்கு ஒரு நெருக்கடி கொடுக்க கூடிய ஒரு சந்தர்ப்பம் உருவாகும்.
தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் ஊடாக சிங்கள தேசத்தினுடைய அரசியல் அமைப்பை சிங்கள தேசத்தினுடைய அந்த வட்டத்துக்குள் நாங்;களும் இருக்கின்றோம் என்ற கோணத்தில் பார்க்கப்படும். எனவே சிங்கள தேசம் என்ற வட்டத்தில் இருந்து விலகி தமிழ் மக்கள் தங்களது தனித்துவத்தை விடாப்பிடியாக வலியுறுத்துகின்றனர் என காட்டக் கூடிய ஒரே ஒரு தேர்தல் முறை இந்த ஜனாதிபதி தேர்தலும் ஒரு பகிஸ்கரிப்பும்.
இன்று தமிழ் பொது வேட்பாளர் என்று தமிழ் தேசியத்தை வலியுறுத்தி வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார் அந்த வேட்பாளருக்கு பின்னால் உள்ள சக்திகள் நேற்று வரைக்கும் ஒற்றையாட்சிக்குள் இருக்க கூடிய 13 திருத்தத்தை வலியுறுத்தி வருகின்றவர்கள் அந்த தரப்புக்குள் இரு வாரங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி சிறப்பு என சொல்லக் கூடிய தரப்பும்; இருக்கின்றனர் அதேவேளை நேற்று முன்தினம் ரணிலுடன் இரகசியமாக சென்று சந்தித்த தரப்புக்களும் இருக்கின்றனர்
1987 இருந்து தமிழ் மக்களுக்கு தோற்றுப் போன 13 திருத்தம் சாபக்கேடான ஒரு முறை ஆனால் பொது வேட்பாளர் ஒன்றை நிறுத்தி தமிழ் தேசிய வாதம் என்ற தத்துவத்தை காட்டி தமிழ் தேசியத்தை ஒருவகையில் கைவிடவதற்கான முறையை மக்களுக்கு திரும்பவும் திரும்பவும் காட்டுகின்றனர் எனவே தமிழ் தேசிய வாதத்தை உச்ச நலநன வெளிக் கொண்டுவரக் கூடிய ஒரு முறைமை பகிஸ்கரிப்பு
இந்த தேர்தலில் பாதிப்பு இல்லாமல் இந்த தேர்தலில் முற்றுமுழுதாக இந்த முறைமையை நிராகரிக்க கூடிய சூழலை காட்டக்கூடிய இடத்திலும் நாங்கள் இலங்கையர்கள் என்ற அரசியலமைப்பு முறைக்குள்ளே தொடர்ந்தும் விசுவாசமாக அதற்குள்ளேயே இருக்கபார்கின்றோம் என்ற செய்தியை ஒரு வேட்பாளரை நிறுத்துவதன் ஊடாக காட்டும் முறைமையைதான் அவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.
அவர்கள் ஒருவரும் தமிழ் தேசிய வாதத்திற்கு நேர்மையாக செயற்படுகின்ற தரப்பு இல்லை அவர்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் ஒவு;வொரு தடவையும் 13 திருத்தத்தை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டை வலியுறித்தி வந்துள்ளனர். அதேநேரம் ஏதே ஒரு விதத்தில் தமிழ் மக்களிடம் வாக்கை பெற்று அதை சிங்கள தேசியவாத கட்டமைப்புக்குள் தொடர்ந்தும் இருக்கின்றோம் என்ற வட்டத்துக்குள் வைத்திருப்பதற்கு இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற நிலமை வந்துள்ளதுடன் மக்களை அந்த வட்டத்துக்குள் வைத்திருக்கின்ற ஒரு சந்தர்ப்பதை ஏற்படுத்தியுள்ளனர்
தமிழ் தேசியவாம் என்ற கோணத்தில் இந்த பொது வேட்பாளரை நிறுத்தி மக்களை ஆதரிக்க செய்வது இலங்கையர் என்ற வட்டத்துக்குள் தொடர்ந்தும் தமிழ் தேசிய வாதத்தை முடக்கி வைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பம்
இந்த தேர்தலில் சர்வதேச சக்திகளுக்கு தங்களது நலன்கள் தேவை அந்த நலன்கள் பெரியளவில் விளையாடிக் கொண்டிருப்பதை அம்பலப்படுத்தி வருகின்றோம். தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைப்பதற்கு விசேடமாக மேற்கு நாடுகளும் இந்தியாவும் விரும்பிநிற்கின்றனர் என்பது தேர்தல் முறைமைகளும் உள்ளக ரீதியாக நடக்கின்ற அரசியல் நிலைப்பாடும் சர்வதேச சக்த்திகளின் நலன்களையும் எடுத்து பார்தால் விளங்கி கொள்ள கூடியதாக இருக்கும் ரணிலை வெல்லவைப்பது மேற்கு நாடுகளும் இந்தியாலும் வெற்றி வாய்ப்பை தேடக்கூடிய நிலமையை தேடுவார்கள்.
ரணில் கடந்த 15 வருடமாக தமிழ் மக்கள் மத்தியில் நட்பு சக்தியாக காட்டிய காலம் இன்று முற்றுமுழுதாக அம்பலப்பட்டுள்ளது அவர் தொடர்பாக எமது கட்சி ஆரம்பத்தில் இருந்து அவரை நிராகரித்து வந்ததுக்கான சுட்டிக்காட்டிய காரணங்கள் அனைத்தும் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது ரணுலுக்கும் ராஜபக்ஸ தருப்புக்கும் இடையே எந்த விதமான வித்தியாசமும் இல்லை என்ற உண்மை இந்த இரண்டரை வருடமாக ரணில் ராஜபக்ஸ தரப்பை காப்பாற்றிய நிலையில் இருந்து நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் வாக்குகள் ரணிலுக்கு விளமுடியாத என்ற கசப்பான உண்மை வல்லரசுகளுக்கு உருவாகியுள்ளது எனவே தமிழ் மக்களின் வாக்குகள் ரணிலுக்;கு விளப்போகவில்லை என்றால் அதை வேறு ஒரு தரப்புக்கு அதாவது ரணிலின் வெற்றியை இல்லாமல் செய்யக் கூடிய தரப்புக்கு போக கூடாது என அவர்கள் அக்கறை செலுத்தியுள்ளனர். அந்த வாக்கை இன்னொரு சிங்கள வேட்பாளருக்கு போடக் கூடிய வாய்ப்பு மிக குறைவு இன்று ரணிலுக்கு பின்னால் சஜி;த். அனுரா 13 திருத்தத்தை வெளிப்படையாக வலியுறுத்தி வருகின்றனர்
2009 ம் ஆண்டு 13 திருத்தத்துக்குள் எங்கள் அரசியலை கொண்டு முடக்கப் போகின்றனர் அதற்கு கூட்டமைப்பு முழுமையாக உடந்தை என நாங்கள் சுட்டிக்காட்டிய நேரத்தில் அப்போது பெரிதா நம்பாம் இருந்திருக்கலாம் ஆனால் இன்று இந்த தரப்புக்கள் 13 திருத்தத்தை வலியுறித்திக் கொண்டிருக்கின்றனர்.
அப்படிப்பட்ட நிலையில் வட கிழக்கு ஈழ தமிழர்களுடைய வாக்குகள் சிங்கள வேட்பாளர்களுக்கு விழும் என்ற நிலை கேள்விக்குறியாக இருக்கின்ற சூழலிலே தமிழ் மக்கள் இந்த முறையும் தேர்தலில் அக்கறையே காட்டாமல்இருக்கின்ற நிலையில் பகிஸ்கரிப்பு வெல்லுவதற்கான வாய்ப்புக் கள் மிகப் பெரியளவில் அதிகரிக்கும் அதேவேளை ஒருபக்கம் ரணிலுக்கு அந்த வாக்கு விளாவிட்டால் அது வேறு ஒருவருக்கும் போகாது என்ற நம்பிக்கை இருந்தால் அது ஒரு பகிஸ்கரிப்பா அது மாறக்கூடாது அது தமிழ் தேசி மக்கள் முன்னணிக்கு ஒரு அங்கீகராமாக அமையும் என்ற ஒரு பயமும் ஏற்பட்டிருக்கின்றது
ஆகவே நேற்று வரைக்கும் ஒற்றையாட்சிக்குள் இருக்க கூடிய 13 திருத்தத்தை வலியுறுத்தி வந்த தரப்புக்கள் சில பேரை சேர்த்து அவர்கள் ஒற்றுமை என்ற போலி ஒற்றுமையை காட்டி 13வது திருத்தம், ஒற்றையாட்சியையும், சமஸ்டியையும் நிராகரித்து வருவதாக சொல்லி எல்லோரும் அதற்கு பின்னால் ஒற்றுமைப்பட்டிருக்கின்றோம் போலி நிலமையை காட்டி இந்த பகிஸ்கரிப்பில் இருந்து மக்களை தவிர்த்து ரணிலுக்கு மாற்றாக போககூடிய வாக்குகளையும் பகிஸ்கரிப்பு வாக்குகளையும் சேர்த்து தங்களுக்கு விசுவாசமான தரப்புக்கு எடுக்க வேண்டும் என்ற நொககத்தோடு இன்று இந்த பொது வேட்பாளர் என்ற தரப்பை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழரசுகட்சியின் ஒரு தரப்பு சஜித்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது அந்த அணி கடந்த 15 வருடமாக சமஸ்டி என்ற வாரத்;தையை உச்சரிக்க தயாரா இல்லாத இருந்த தரப்பு இன்று சமஸ்டியையும் தமிழ் தேசத்தையும் திடீரேன உச்சரிக்க தொடங்கியுள்ளதுடன் அதனை சிங்களத்திலும் தெரிவித்து சஜித்துக்கு ஆதரவு தருவதாக முடிவெடுத்துவிட்டு அதேநேரம் அனுராவைப்பற்றியும் புகழாரம்.
சிங்கள மக்கள் மட்டத்தில் ரணிலுக்கு வாக்குகள் விளாமல் சஜித்துக்கு வரக்கூடிய வாக்குகளை ஏதே ஒருவகையில் குழப்பி ரணிலை விட சஜித்துக்கு வாக்குள் வரக்கூடாது என்பதற்காக தமிழ் தேசிய வாதிகள் சஜித்துடன் இருந்து கொண்டு சஜித் எந்தளவு தூரத்திற்கு சிங்கள தேசியவாதத்திற்கு நேர்மையாக நடந்து கொள்வார் என்ற குழப்பத்தை ஏற்படுத்தி அந்த வாக்குகளை ரணிலை நோக்கி செல்வதற்கான அல்லது சஜித்துக்கு போகாமல் செய்யும் முறைமை நடந்து கொண்டிருக்கின்றது
அதேவேளை தமிழ் மக்கள் மட்டத்தில் சஜித்தை ஆதரிக்கின்ற வடகிழக்கை பிரதிநிதித்து வப்படுத்துகின்ற தமிழ் அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கிடையாது. தமிழ் மக்கள் மட்டத்தில் ஒரு குழப்பம் வரப்போவதில்லை ஆனால் அவர்களது நிலைப்பாடு சிங்கள மக்கள் மத்தியில் மட்டும் தான் குழப்பங்களை ஏற்படுத்தலாம் இதனை எல்லாவற்றையும் தொகுத்து பார்த்தால் இன்று தமிழ் தேசியத்துக்கு நேர்மையாக ஒரு செய்தியை கொடுக்க கூடிய ஒரே ஒரு வழி பகிஸ்கபரிப்பு மட்டும்தான்
ஆகவே மக்களிடம் மிகவும் பொறுப்போடு கேட்டுக் கொள்வது தயவு செய்து இந்த போலி ஒற்றுமை என்ற கோசங்களுக்கு விலை போகவேண்டாம் இந்த போலி கோசங்களுக்கு மறந்து ஏமாந்து ஆணையை கொடுக்கும் நிலமை உருவாகினால் நாளை அந்த ஆனையை வைத்து இந்த ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குகின்ற சதி முயற்சிகள் முன்னெடுக்கப்படும். இனழிபு;பு சதிகள் ஊடாக தமிழ் மக்கள் ஏமாறக் கூடாது என்ற மனநிலைக்கு வளர்ந்து விட்டார்கள் என்ற செய்தியை தேர்தலை முழுமையாக பகிஸ்கரிப்பதன் ஊடாக மக்கள் நிலைநாட்ட வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.