LOADING

Type to search

கனடா அரசியல்

Durham Tamil Association hosts ‘Hope for Homeland Projects Gala Night

Share

டுறம் தமிழர் சங்கம் நடத்திய ‘தாயகத்திற்குரிய உதவித் திட்டங்கள்’ நோக்கம் கொண்ட இராப்போசன விருந்து

கனடாவில் வெற்றிகரமாக கடந்த பல ஆண்டுகளாக இயங்கிவரும் ‘டுறம் தமிழர் சங்கம்’ (Durham Tamil Association) நடத்திய ‘தாயகத்திற்குரிய உதவித் திட்டங்கள்’ நோக்கம் கொண்ட இராப்போசன விருந்து கடந்த 15ம் திகதித ஞாயிற்றுக்கிழமையன்று மாலை பிக்கரிங் நகரில் உள்ள மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்று நேர்த்தியாக நகர்ந்து சென்றது.

இந்த நல்நோக்கம் கொண்ட இராப்போசன விருந்து விழாவை அறிவிப்பாளர் மதிசயன் அவர்கள் தொகுத்து வழங்கினார்

அன்றைய தினம் இராப்போசன விருந்து விழாவில் ஆடல் பாடல் மற்றும் உரைகள் ஆகியனவும் இடம்பெற்றன.

‘தாயகத்திற்குரிய உதவித் திட்டங்கள்’ நோக்கம் கொண்டதான இந்த விழாவில் திட்டத்தின் நோக்கங்கள் பற்றி சங்கத்தின் தலைவர் ஹாந்தன் மாணிக்கவாசகர் மற்றும் திட்டப் பொறுப்பாளர் திரு சுப்பிரமணியம் ஆகியோர் விபரமாக எடுத்துரைத்தனர்.

எமது தாயகத்தின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உதவிகள் தேவைப்படும் மாணவர்கள்- விதவைத் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் – வயதில் முதிர்ந்தவர்கள் ஆகியோர்க்கு வழங்கி வரும் உதவிகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் அதிகரித்துள்ள தேவைகள் தொடர்பாகவும் விபரங்களை அவர்கள் வெளியிட்டனர்.

இந்த திட்டத்திற்கு பெரும் நிதி வழங்கி ஆதரவு வழங்கிய கல்வி நிறுவனத்தின் அதிபர் திரு முரளி நாராயணதாஸ் அவர்கள் தனது ஆதரவை தொடர்ந்து வழங்கவுள்ளதாகவும். இந்த நல்ல பணிகளைச் செய்து வரும் ‘டுறம் தமிழர் சங்கம்’ (Durham Tamil Association) அமைப்பினருக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

மேற்படி நல்நோக்கத்திற்காக அங்கு அனுமதிச் சீட்டுக்கள் வாங்கி சமூகமளித்திருந்த அனைவருக்கும் அங்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கனடா உதயன் பத்திரிகை சார்பிலும் ‘தேசம் பத்திரிகை சார்பிலும் அவற்றின் ஆசிரிய பீடத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Arjune; Local Journalism Initiative Reporter- 2