LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றார்

Share

ந.லோகதயாளன்.

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்ட அதேவேளை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வசம் பாதுகாப்பு, நிதி, பொருளாதார அபிவிருத்தி, தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா, வலுசக்தி, விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் ஆகிய அமைச்சுக்கள் உள்ளன.

பிரதமர் ஹரிணி அமரசூரிய வசம் நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் முயற்சி, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பெண்கள், சிறுவர்கள், இளைஞர் விவகாரம், விளையாட்டு, வர்த்தக வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி, சுகாதாரம் ஆகிய அமைச்சுக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜித ஹேரத் வசம் புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு , ஊடகத்துறை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து, பொதுமக்கள் பாதுகாப்பு, வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு, கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சுக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.