LOADING

Type to search

இலங்கை அரசியல்

முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து மதுபான நிலைய அனுமதிப் பத்திரம் பெற்றவர்களில் முன்னாள் நீதியரசரும் வடக்கின் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரனும் ஒருவர்

Share

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ‘தீவிரமான ‘சைவப் பழமும்’. முன்னாள் நீதியரசரும் வடக்கின் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் கிளிநொச்சியில் ஓர் மதுபானச்சாலை பெற்றமை தற்போது அம்பலமாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரடிப்போக்குச் சந்தியில் ஏ9 வைன் ஸ்ரோர் என்னும் பெயரில் இயங்கும் மதுபானசாலைக்கான அனுமதியை வடக்கு மாகாண முதலமைச்சர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.விகனேஸ்வரன் ஊடாகப் பெற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சி.வி.விக்னேஸ்வரன். 2024-02-19 அன்று எழுத்து மூலக் கடிதம் வழங்கியே இந்த மதுபானசாலைக்கான அனுமதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

தனுசா நடராசா என்னும் பெயரில் இந்த மதுபானசாலைக்காக நீதியரசர் விக்னேஸ்வரன் பரிந்துரைத்து இந்த மதுபானசாலை வழங்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் 172 மதுபானசாலைகளிற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு அவை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

எமது அரசியல்வாதிகள் கூட மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் நல்ல சாலைகள் (வீதிகள்) எமது பிரதேசங்களில் அமைக்கப்பட வேண்டும் என்று எண்ணாமல் ‘மதுச்சாலை’கள் பற்றியே சிந்தித்த வண்ணம் இருந்திருக்கின்றார்கள் என்பது தற்போது புலனாகியுள்ளது.