LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா- ரிச்மண்ட் ஹில் நகரில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் வாகனம் வேகமாக மோதியதில் ஒன்றரை வயதுக் குழந்தை மரணத்தை தழுவியது!

Share

மேலும் வெவ்வேறு வயதுகளை உடைய 6 குழந்தைகள் படுகாயம்!.

வாகனத்தைச் செலுத்திய 70வயதுடைய ஆண் ஒருவர் கைது!.

கனடாவில் ரொறன்ரோ பெரும்பாகத்தின் எல்லையில் அமைந்துள்ள ரிச்மண்டஹில் நகரில் 10ம் திகதி புதன்கிழமை மதியம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் நிலத்தை தொட்டு நின்ற கண்ணாடி ஜன்னல் வழியாக வாகனம் பாய்ந்து சென்றதில் ஒன்றரை வயது குழந்தை இறந்துள்ளது, மேலும் ஆறு குழந்தைகள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யங் தெரு மற்றும் நாட்டிங்ஹாம் தெரு ஆகியவை சந்திக்கும் சந்தியில் அமைந்துள்ள மேற்படி குழந்தை பராமரிப்பு நிலையத்தில் மேற்படி துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது

இந்த சம்பவத்தில் ஒன்று முதல் மூன்று வயது வரையிலான ஏழு குழந்தைகளும், மூன்று வயதில் மூத்தவர்களான ஊழியர்களும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஒன்றரை வயது குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, இரண்டாவது குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது, மீதமுள்ளவர்கள் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றுயோர்க் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி துர்ப்பாக்கிய சம்பவம் தொடர்பாக ஒன்ராறியோவின் கல்வி அமைச்சரும் மார்க்கம்-ஸ்டௌஃப்வில் தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினருமான போல் கலண்ட்ரா, அவர்கள் தனது துயரத்தைப் பகிர்ந்த கொண்டார். சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், “இந்த துயரமான சம்பவத்தால்அப்பகுதி மக்கள் ஆழ்ந்த கவலை” அடைந்ததாகக் கூறினார்.