Canadian High Commissioner in Sri Lanka, Eric Walsh meets New Leader of Tamil Federal Party , Mr. Sritharan Sivagnanam
Share
இலங்கைக்கான கனேடியத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி மற்றும் சாள்ஸ் எம்.பி சந்திப்பு.!!
மன்னார் நிருபர்
(13-02-2024)
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் 13-02-2024 தினம் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் அவர்களை, கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பில் கனேடியத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் டானியல் வூட், அரசியல் அலுவலர் கணேசநாதன் சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துரைத்த தூதுவர், ஈழத்தமிழர்களின் அரசியல் நலன்சார்ந்து முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகளுக்கு தம்மாலான பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.




















