யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொள்ளுதல், பெற்றோல் குண்டு அடித்தல், பொருட்களுக்கு சேதம் விளைவித்தல், வாகனங்களை தீயிட்டு எரித்தல் போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறுகளில் வைக்குமாறு யாழ் நீதவான் ...
பு.கஜிந்தன் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தில் தங்கரத உற்சவம் இன்று (22) இடம்பெற்றது. மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற கொடித்தம்ப பூசையைத் தொடர்ந்து, 5.00 மணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது. துர்க்கையம்பாள் சண்டேஸ்வரியுடன் உள்வீதி ஊடாக வலம் வந்து, தங்கரதத்திலேறி வெளிவீதியில் வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தாள்.
சென்னையிலிருந்து ஜூன் 16 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காங்கேசந்துறைக்கு வந்து செல்லும் கோர்டிலியா உல்லாசப்பயணக்கப்பலில் வந்து செல்லும் பயணிகளுக்கான சேவைகளை வழங்குவது தொடர்பில் வடமாகாண சுற்றுலாப் பணியகம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுடன் 21 ஓகஸ்ட் 2023 அன்று ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். இக்கலந்துரையாடலில் ...