யாழ். சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாது இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இன்றைய வழக்கு விசாரணைகள் தவணையிடப்பட்டன. தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகராவின் மிக மோசமான இன மத துவேசத்துடனான நீதித்துறையை அச்சுறுத்தும் உரைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. கடந்த 10ம் திகதி ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மையில் குருந்தூர் மலை சட்டவிரோத ...
யாழ். வலிகாம வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவியின் கையில் ஆசிரியர் பலமாகத் தாக்கியதில் மாணவி கையைத் தூக்க முடியாமல் அவதிப் பட்டுள்ளார். மாணவியின் ...