மாவட்ட செயலகமாக இருந்தாலும் சரி, பிரதேச செயலகமாக இருந்தாலும் சரி அங்கே பணிபுரிகின்றவர்கள் அரசாங்கத்துக்கு சார்ந்து வேலை செய்வதற்கு மக்களிடத்தே ஓடி வருகின்றார்கள். அவர்களுடைய பணிகளை அவர்கள் சீராக செய்வதில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரது சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்தார். நேற்றையதினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ...
போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது சுகவீனமுற்றார். இதன்போது, உதவி பொலிஸ் பரிசோதகர் இஷானி சுலோசனா குறித்த தாயாருக்கு குடிநீர் வழங்கியமை கவனத்தை ஈர்த்துள்ளது.
புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலிடு செய்ய வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் வடக்கல்ல தமிழர் தாயகத்தை தாண்டியும் முதலீடு செய்ய தயாராக உள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார். ...