Global Federation of Sri Lankan Business Councils என்னும் சர்வதேச வர்த்தகர்கள் சம்மேளனத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாகத் (Deputy Secretary General.) தேர்தெடுக்கப்பெற்றுள்ள கனடா வாழ் வர்த்தகப் பிரமுகரும் சமூகச் செயற்பாட்டாளருமான குலா செல்லத்துரை
Share
இலங்கையைத் தாயகமாகக் கொண்டு. தற்போது உலகின் பல நாடுகளிலும் வர்த்தகத் துறையில் வெற்றிகரமாக ஈடுபட்டுவரும் வர்த்தகர்களின் கூட்டுச் சம்மேளனமான Global Federation of Sri Lankan Business Councils என்னும் சர்வதேச வர்த்தகர்கள் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண வைபவம் அண்மையில் கொழும்பில் நடைபெற்து.

இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட இந்த வைபவத்தில் மேற்படி சம்மேளனத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக (Deputy Secretary General.) கனடா வாழ் வர்த்தகப் பிரமுகரும் சமூகச் செயற்பாட்டாளருமான குலா செல்லத்துரை அவர்கள் தேர்தெடுக்கப்பெற்றுள்ளார். அவரை வாழ்த்தி உலகெங்கும் உள்ள அவது நண்பர்கள் செய்திகளை அனுப்பி வருகின்றார்கள்.
கனடா உதயன் பத்திரிகை நிறுவனமும் நண்பர் குலா செல்லத்துரை அவர்களை வாழ்த்துகின்றது.




















