LOADING

Type to search

கனடா அரசியல்

Grand Opening Ceremony of newly expanded Medical Centre of Medcentre Health held on 18-07-2025 in Scarborough.

Share

புதிதாக விஸ்தரிக்கப்பெற்ற ஸ்காபுறோ Medcentre Health அவசர மருத்துவ நிலையத்தின் திறப்பு விழா

ஸ்காபுறோ நகரில் நீண்ட காலமாக மார்க்கம்-மெக்னிக்கல் சந்திப்புக்கு அருகாமையில் இயங்கிவந்த Medcentre Health அவசர சிகிச்சை வைத்திய நிலையம் தற்போது புதிதாக விஸ்தரிக்கப்பெற்று அதன் திறப்பு விழா கடந்த 18-07-2025 வெள்ளிக்கிழமையன்று ஸ்காபுறோவில் 2225 Markham Road- (Ground Floor) Scarborough, Ontario என்னும் விலாசத்தில் அமைந்துள்ள விசாலமான இடத்தில் திறந்து வைக்கப்பெற்றது.

டாக்டர் செந்தில்மோகன் அவர்களது தலைமையின் கீழ் இயங்கிவரும் இந்த அவசர வைத்திய சிகிச்சை நிலையம் ஏற்கெனவே பல்லின மக்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி Medcentre Health அவசர மருத்துவ நிலையத்தின் திறப்பு விழாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் சுகாதார அமைச்சின் இணையமைச்சரும் ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் மாகாண பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் மற்றும் அமைச்சர் றேமன்ட் சோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். பலவேறு ஊடகவியலாளர்களும் பத்திரிகை ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

நவீன வசதிகள் பல கொண்டவையாக விளங்கு இந்த அவசர சிகிச்சை நிலையத்தில் மருந்துச் சாலையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வைத்திய சிகிச்சை நிலையத்தில் உள்ள Medcentre Urgent Care மற்றும் Medcentre Women’s Health Care ஆகிய பிரிவுகள் சிறப்பான வைத்திய உபகரணங்களையும் பரிசோதனைக் கருவிகளையும் கொண்டது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

2225 Markham Road- (Ground Floor) Scarborough, Ontario என்னும் விலாசத்தில் அமைந்துள்ள இந்த வைத்திய நிலையத்தில் அவசர சிகிச்சை பெற 24 மணி நேரமும் 416 297 7777 என்னும் இலக்கத்தை அழைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளை டாக்டர் செந்தில்மோகன் அவர்களை வாழ்த்துவதற்கு 416 357 7714 என்னும் இலக்கத்தை அழைக்கவும்.

இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்.