LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் அமரர் பொன். சிவபாலன் அவர்களின் 27வது ஆண்டு நினைவேந்தல்!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாண . மாநகரசபையின் முன்னாள் முதல்வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் சட்டத்துறைச் செயலாளருமான அமரர் பொன். சிவபாலனின் 27ஆவது ஆண்டு நினைவு தினம் 11ம் திகதி வியாழக்கிழமையன்று(11) நினைவுகூரப்பட்டது.

யாழ். மூளாயில் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதில் குடும்ப உறுப்பினர்கள் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி யாழ். மாநகரசபை நல்லூர் கல்யாண மண்டபத்தில் மாநகர போக்குவரத்து சம்பந்தமாக உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது கூரைமேல் வைக்கப்பட்ட கிளைமோர் தாக்குதலில் பொன்.சிவபாலன் கொல்லப்பட்டார்.

அவருடன் யாழ். நகர இராணுவத் தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிஸ், சிரேஷ் பொலிஸ் அத்தியடசகர் சந்திரா பெர்னாண்டோ, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரமோகன், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சரத் பெர்னாண்டோ, யாழ். தலைமையக பொலிஸ் அதிகாரி மோகனதாஸ், யாழ். நகர பிரிகேட் மேஜர் கப்டன் ராமநாயக்க, பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெராட், யாழ். மாநகர சபை உதவி ஆணையாளர் பத்மநாதன், வேலைப்பகுதிப் பொறியியலாளர் ஈஸ்வரன், கட்டட வரைபடக் கலைஞர் திருமதி மல்லிகா இராஜரட்ணம், தட்டெழுத்தாளர் பத்மராஜா ஆகியோர் அடங்கிய பன்னிரண்டுபேர் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

பொன்.சிவபாலன் தமிழர் விடுதலைக் கூட்டணியினை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ். மாநகரசபையின் முதல்வராக பணியாற்றியதுடன் பிரபல சட்டத்தரணியுமாக விளங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.