கனடா றிச்மண்ட் பிள்ளையார் தேவஸ்த்தான நவராத்திரி விழாவில் கவின்கலாலயா இசைக் கல்லூரி ஆசிரியையும் மாணவிகளும் அளித்த கர்நாடக இசை நிகழ்ச்சிகள்
Share
கடந்த செப்டம்பர் மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று கனடா றிச்மண்ட் பிள்ளையார் தேவஸ்த்தானத்தில் நவராத்திரி விழாவையொட்டி கவின்கலாலயா இசைக் கல்லூரி ஆசிரியையும் மாணவிகளும் அளித்த கர்நாடக இசை நிகழ்ச்சிகள் அங்கு சமூகமளித்திருந்த அடியவர்கள் மற்றும் கர்நாடக இசை ரசிகர்கள் ஆகியோரை மெய்மறக்கச் செய்தன.

கவின்கலாலயா இசைக் கல்லூரியின் நிறுவனரும் குருவுமாகிய கவினாலி சிறி அவர்களின் இசைப் பயிற்சியிலும் வழிகாட்டலிலும் கர்நாடக இசையைப் பயின்றுவரும் மாணவிகள் தங்கள் குருவோடு இணைந்தும் குழுவாகவும் மேடையில் இனிய பாடல்களை பாடினர்.
இறுதியில் ஆலயத்தின் சிவாச்சாரியப் பெருமக்கள் இணைந்து கவின்கலாலயா இசைக் கல்லூரியின் நிறுவனரும் குருவுமாகிய கவினாலி சிறி அவர்களையும் மாணவிகளையும் கௌரவித்தனர்.
படங்களும் செய்தியும்:- சத்தியன்




















