Toronto’s Royal Leapage Ignite Realty Brokerage hosts it’s 9th Annual Awards Night-2025 as a Colorful Event.
Share
ரொறன்ரோவில் இயங்கிவரும் Royal Leapage Ignite Realty Brokerage நிறுவனம் நடத்திய சிறப்பான 9வது ஆண்டு விற்பனை விருதுகள் வழங்கும் வைபவம்..
(புகைப்படங்கள்- ரவி அச்சுதன் – செய்தியாக்கம்:- சத்தியன்)
ரொறன்ரோ பிராந்தியத்தில் வெற்றிகரமாக இயங்கிவரும் Royal Leapage Ignite Realty Brokerage நிறுவனம் நடத்திய சிறப்பான 9வது ஆண்டு விற்பனை விருதுகள் வழங்கும் வைபவம் கடந்த 13ம் திகதி சனிக்கிழமையன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள விழா மண்டபத்தில் சிற்பபாக நடைபெற்றது.. இதற்காக ஏற்பாடுகளை நிறுவனத்தின் தலைவரும் விற்பனை முகவருமான சுகன் சிவராஜா தனது சகோதரர்கள் மற்றும் பணியாளர்கள்; மற்றும் தொண்டர்கள் சகிதம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி மற்றும் நகரசபை உறுப்பினர் நீதன் சண்முகராஜா ஆகியோர் அழைக்கப்பெற்றிருந்தனர்.
நூற்றுக்கணக்கான விற்பனை முகவர்கள் அங்கு கூடியிருக்க அவர்களுள் பலர் தங்களுக்குரிய வெற்றியாளர் விருதுகளைப் பெற்றுக்கொண்டார்கள்.இவ்வருடத்தின் அதி உயர் விற்பனை விருதுகளை இருவர் பெற்றுக்கொண்டனர் அவர்களில் விற்பனை முகவர் போல் ஹல் அவர்கள் மற்றும் கமல் அமிர்தலிங்கம் ஆகியோர் வெவ்வேறு பிரிவுகளில் அதி உயர் விற்பனை விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.-
அத்துடன் சகோதரர்களான சுகன் சிவராஜா-சிவகுமார் சிவராஜா-உதயன் சிவராஜா-ராஜ் சிவராஜா ஆகியோர் கூட்டாக இணைந்த வகையில் உயர் விற்பனை முகவர்களுக்கான விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். இன்னும் பலர் சிறந்த விற்பனை முகவர்களுக்கான விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.



























