LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளார்.

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். நெடுந்தீவு 3ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடும்பஸ்தர் கடந்த 15ஆம் திகதி இரவு 10 மணியளவில் இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் 16ஆம் திகதி நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, 17ஆம் திகதி அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி 17ம் திகதி அன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.