LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் புகையிரத தண்டவாளத்தின் மீது அமர்ந்திருந்த இளைஞன் புகையிரதம் மோதி உயிரிழப்பு!

Share

பு.கஜிந்தன்

16ம் திகதி திங்கட்கிழமையன்று மாலை இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தின் மீது அமர்ந்திருந்த நிலையில் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த தலையசிங்கம் சுதாகரன் (வயது 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன்அன்று மாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள ரயில் நிலையத்துக்கு அருகாமையில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்துள்ளார்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த ரயில் இளைஞனை மோதித் தள்ளியது. இந்நிலையில் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.