LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைன் மீது ரஷியா வான்வழி தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்

Share

உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் வான்பரப்பில் ரஷியா தனது அதிந வீன ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தி மிகப்பெ ரிய தாக்குதலை நடத்தியுள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த வான்வழித் தாக்குதல், இந்த நான்கு வருடப் போரிலேயே மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஒரேஷ்னிக் ஏவுகணை ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு வேகமாகப் பாயக்கூடியது. இது விண்கல் போல மிக அதிவேகமாகப் பயணிப்பதால், தற்போதைய எந்தவொரு வான் பாதுகாப்பு அமைப்பாலும் இதைத்தடுத்து அழிக்க முடியாது என்று ரஷிய அதிபர் புதின் கூறியுள்ளார். உக்ரைன் போரில் ரஷியா இந்த பயங்கரமான ஏவுகணையைப் பயன்படுத்துவது இது மூன்றாவது முறை ஆகும். ஒரே இரவில் 600 தற்கொலை டிரோன்கள் மற்றும் 90 ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவிப்பெரும் தாக்குதலை நடத்தியது. இந்த மிகப்பெரிய தாக்குதலில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.