LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஐ.எம்.எப்பிடம் இருந்து வாங்கப்பட்ட நிதியில் 9 ரில்லியன் ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளது – சுந்தரலிங்கம் பிரதீப்

Share

உங்களுக்கு முடியாவிட்டால் நாட்டை முடியுமானவர்களிடம் கொடுத்துவிட்டு நீங்கள் வீடு செல்லுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

பு.கஜிந்தன்

ஐ.எம்.எப் இடமிருந்து வாங்கப்பட்ட கடனில் மூன்று ரில்லியன் ரூபா மாத்திரமே அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றது. மிகுதி 9 ரில்லியன் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு ஊழல் செய்யப்பட்டு இருக்கின்றது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஊடகவியாளர்கள் சந்திப்பு இன்று யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையிலே தற்பொழுது இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கின்றது. எனவே தற்பொழுது ஐ.எம்.எப் இலங்கைக்கு அதிகளவு கடன் கொடுத்தமை காரணமாக ஐ.எம்.எப் இந்த கடன் சம்மதமாக அதாவது சீனாவில் இருந்து இலங்கை பெற்ற கடன் தொடர்பாக அறிக்கை கேட்ட பொழுதும் இலங்கை அரசாங்கம் வாய் திறக்கவில்லை

சீனா அரசாங்கமே தொடர்பாக கருத்துக்கள் கூறப்படவில்லை எனவே கடந்த காலத்திலே மத்திய வங்கி ஆளுநர் எமது நாடு கடன் கடனை திருப்பி செலுத்தாது என்று வெளிப்படையாக கூறியது பிரச்சனை வந்தது.

எனவே அவர் என்ன செய்தது என்பது தனித்தனியாக கடன் பெற்ற நாடுகள் சென்று பேச்சுவார்த்தை செய்திருந்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வுகளை காணலாம்.

எனவே தற்போது ஐ.எப்.எப் கடன் வாங்கின் காரணமாக போடுகின்ற அனைத்து நிபந்தனைகளுக்கும் இலங்கை உட்பட வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.

அதுமட்டுமல்ல அதை வெளிநாடுகளைப் பெற்ற கடனுக்கு அந்த நாடுகள் விதிக்கின்ற விதிக்கின்ற நிபந்தனைகளுக்கும் நாடு செலவிடு ஏற்பட்டது. அதன் காரணமாகத்தான் இன்று இந்தியா இந்தியாவில் அடுத்த கடனாக இந்தியாவிடம் பெற்று இருக்கிறது. இந்தியா கேட்கின்ற வளங்களை இலங்கை கொடுக்கின்ற நிலைமை என்று காணப்படுகின்றது.

உங்களுக்கு முடியாவிட்டால் நாட்டை முடியுமானவர்களிடம் கொடுத்துவிட்டு நீங்கள் வீடு செல்லுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

அதாவது அபிவிருத்தி செய்வதற்காக வெளிநாட்டிலிருந்து ஒன்பது ரில்லியன் ரூபாய் கடன் வாங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் கணக்காய்வு திணைக்களம் கூறி இருக்கின்றது வாங்கப்பட்ட கடனில் மூன்று ரில்லியன் ரூபா மாத்திரமே அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றது. மிகுதி 9 ரில்லியன் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு ஊழல் செய்யப்பட்டு இருக்கின்றது – என்றார்.