விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டமன்றத்தில் ஆளுநர் தனது கடமையை ஆற்றாமல் அவையில் இருந்து வெளியேறியிருப்பது அவரது வாடிக்கையான அணுகுமுறை தான். இதில் அதிர்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை. அவர் இப்பொறுப்பில் இருக்கும் வரை இத்தகைய அடாவடிகளைத் தொடரவே செய்வார். அதற்கு ஏதேனும் சாக்குபோக்குகளையும் சொல்வார். ...
அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இன்று இணைந்தது. இணைப்புக்கு பிறகு மத்திய அமைச்சரும், பா.ஜனதா தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் பேட்டி அளித்தனர். அப்போது அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த அ.ம.மு.க. ...
பியூஸ் கோயல் எதற்காக வந்து இருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியாது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில், அதில் ...