வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் இந்த அறிக்கையிடப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே 19-11-2023 தினம் ...
(20-11-2023) சித்தங்கேணியில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பான சட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. இந்நிலையில் உடல் முழுவதும் அடிகாயங்கள், இயற்கையான மரணம் இல்லை, உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் இன்று நண்பகல் உடற்கூறு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் ...
(20/11/2023) முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் மீள இன்றைய தினம் (20) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப் பட்டு செப்டெம்பர் 15 வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் ...