யாழ்ப்பாண மாவட்டம் வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் (J/07) உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலுசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், எதிருவரும் 2023.07.12 ஆம் திகதி அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக ...
வரலாற்று சிறப்புமிக்க பெற்ற யாழ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பதினாறாவது நிறைவுநாள் உற்சவமாக தெப்போற்சவம் 04.07. 2023 அன்று இரவு இடம்பெற்றது. இதில் நயினாதீவு நாகபூசணி அம்பாள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பல பாகங்களில் வருகைதந்து பக்தர்களின் பக்திபூர்வமாக அருள்கடாச்சத்தினை பெற்றுச்சென்றனர்.
யாழ்ப்பாணம் – நயினாதீவில் அமைந்துள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் நயினாதீவுக்கு வந்து 50வது ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு சர்வமதங்களின் பங்கேற்புடன் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. நயினாதீவு மேகலை அரங்கத்தில் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் இந்நிகழ்வு ...