LOADING

Type to search

இந்திய அரசியல்

’அதிமுக துணை பொதுச் செயலாளர் பதவியை ஏற்க மாட்டேயென’ எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்

Share

அதிமுக துணை பொதுச் செயலாளர் பதவியை ஏற்கப்போவதில்லையென்று முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் எஸ்பி வேலுமணி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர், பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கியதாக கூறப்படும் துணைப் பொதுச் செயலாளர் பதவியை தாம் ஏற்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “என்னை நம்பி 9 மாவட்டச் செயலாளர்கள் என்னுடன் வந்துள்ளனர். அவர்களை அப்படியே விட்டுவிட்டு நான் மட்டும் பதவி ஏற்க முடியாது. எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை. என்னை நம்பி வந்த அனைவருக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும். அவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்கத் தயாராக இல்லை.” என்றார்.