LOADING

Type to search

இந்திய அரசியல்

அதிமுக முழுமையாக பாஜகவின் பிடியில் சிக்கியுள்ளது – அரவிந்த் கெஜ்ரிவால்

Share

சென்னையில் டில்லி முன்னாள் முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தமிழ்நாட்டு மக்கள் பாஜகவின் பிளவுவாத அரசியலை வெறுக்கிறார்கள். மக்கள் பாஜகவை வெறுக்கின்றனர். இந்தியாவில் மிக மோசமான ஊழல் கட்சி என்றால் அது பாஜகதான். பாஜக ஆட்சியில் முன்னேறிய ஒரே ஒரு மாநிலத்தை காட்ட முடியுமா?. 30 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ள குஜராத்தில் சாலைகள் படுமோசமாக உள்ளன. அதிமுக முழுமையாக பாஜகவின் பிடியில் சிக்கியுள்ளது. அதிமுகவுக்கு வாக்களித்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி தடைபடும். பாஜகவிற்கு ஒரு எம்.எல்.ஏ. கிடைத்தாலும் அக்கட்சியை சேர்ந்தவரே முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். வாரிசு அரசியலை விமர்சனம் செய்யும் பாஜகவினர் தங்களது பிள்ளைகளை என்ன செய்கிறார்கள் என பார்க்க வேண்டும். பாஜக கட்சி வெற்றி பெறக்கூடாது என தமிழக மக்கள் நினைக்கின்றனர். தேசிய அளவில் மு.க.ஸ்டாலினின் குரல் மிகவும் வலிமையானதாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் திமுக ஆட்சியில் மிக திருப்தியாக உள்ளனர். காலை உணவுத் திட்டத்தை பஞ்சாபில் செயல்படுத்த திட்டமிட்டு வருகிறோம். திமுக அரசு கல்விக்கான திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே அதிக தொழில் முதலீட்டை தமிழ்நாடுதான் ஈர்த்துள்ளது. கடந்த முறையை விட அதிக பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.