அநுர அரசாங்கத்தின் நீதி அமைச்சர் ஹர்ஷன மஹர சிறைக்கு விஜயம் செய்தார்
Share
– பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார 01ம் திகதி செவ்வாய்க்கிழமை மஹர சிறைச்சாலைக்கு விஜயம் செய்து, அங்குள்ள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
சிறைச்சாலைகளுக்குள் எதிர்பாராதவிதமாக மோதல்கள் அல்லது பதற்றமான சூழ்நிலைகள் தோற்றுவிக்கப்படும் போது, அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாகக் பேசப்பட்டது.
சிறைச்சாலைகளுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு மற்றும் நிர்வாக மறுசீரமைப்புப் பணிகள் குறித்தும் அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார்.















