முதலாம் ஆண்டு நினைவுஞ்சலி | அமரத்துவமாது திருமதி சுபத்திராதேவி மாயா திரவியம்
Share
(நாச்சிமார் கோவிலடி- யாழ்ப்பாணம்)
மண்ணில்:- 09-05-1942
விண்ணில் : 06-08-2025
எமது குலவிளக்கு அமரத்துவம் அடைந்து ஓராண்டு பூர்த்தியாகின்றது. தன் வாழ்நாள் முழுதும் எமது குடும்பத்திற்காக சகல வழிகளிலும். தன்னாலியன்ற பணிகளைச் செய்து தனது கணவர் மற்றும் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காகவும் பணிகள் செய்த குடும்ப விளக்கு அணைந்து ஓராண்டைக் கடக்கும் இந்நாளில் அவரது நினைவுகள் மட்டும் எம்மைவிட்டு அகலாது உள்ளன.
அமரத்துவமாது சுபத்திராதேவி அவர்களின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலிப் பிரார்த்தனையும் மதிய போசனமும் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை. மதியம் ஸ்காபறோ பேர்ச்சமவுண்ட் வீதியில் உள்ள கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெறும் என்பதையும் அதில் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்புடடைய துணைவியே எம்மை அணைத்து வளர்த்த அன்னையே என்றும் எங்கள் நலன் கருதி எண்ணிப் பணிசெய்த தேவியே! துன்பங்கள் எம்மைத் தீண்டிடாமல் தெய்வத்தை துதித்தவரே! துாரதேசம் சென்ற தந்தையின் கடமைய்ை தன்னில் சுமந்தவரே! உறவினர் அயலவருடன் இயல்பாய் உறவாடி மகிழ்ந்தவரே! உதவுவதில் உடனுக்குடன் முன்வந்து நின்றவரே!- வாழ்வின் நெறிகளை வள்ளுவனின் வரிகளாய் கடைப்பிடித்து வாழ்ந்தவரே! நொடியேனும் எமை விலகா வாழ்ந்தவரே தொடர்க விண்ணிலும்!
இங்ஙனம்,
என்றும் மறவாத உங்கள் நினைவுகளுடன்
கணவர், மக்கள், மருமக்கள், மற்றும் பேரப்பிள்ளைகள்















