LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்க கடற்படையில் 300 பேரை இந்திய வம்சாவளி மாணவி வழிநடத்துகிறார்

Share

அமெரிக்க கடற்படையில் 300 பேரை இந்திய வம்சாவளி மாணவி வழிநடத்துகிறார். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ரித்தி சவுகான், அமெரிக்காவில் வசித்து வருகிறார். சிறு வயது முதலே ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் அதீத ஆர்வம் கொண்ட இவர், அமெரிக்க கடற்படையின் இளைஞர் பிரிவான ‘சீ கேடட்’ அமைப்பில் இணைந்தார். இவரது கடின உழைப்பு, தலைமைப் பண்பு மற்றும் அசாத்திய திறமைகளைக் கண்டு வியந்த கடற்படை நிர்வாகம், தற்போது இவருக்கு மிக உயரிய பொறுப்பை வழங்கியுள்ளது. பொதுவாக அனுபவமிக்க அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் 300 கடற்படை வீரர்களை வழிநடத்தும் ‘ரெஜிமென்டல் கமாண்டர்’ பொறுப்பு ரித்தி சவுகானுக்கு வழங்கப்பட்டுள்ளது.