LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்க விமானப்படை விமானம் கீழே விழுந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்

Share

விமானத்தில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் உட்பட 8 பேரும் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான விமானப் படைத் தளம் அமைந்துள்ளது. இங்கு பி-52 ரக போர் விமானம் ஒன்று நேற்று வழக்கமான சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டது. ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் விமானம் முழுவதுமாக தீப்பிடித்து சாம்பலானது. இந்த விபத்தில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் உட்பட 8 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் சிறந்த அமெரிக்க வீரர்களை இன்று இழந்துவிட்டோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. உயிரிழந்தவர்களில் ராணுவ வீரர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்குவர்” என தெரிவித்துள்ளார்.