LOADING

Type to search

சினிமா

அருள்தாஸ் நடித்த ‘ரீயூனியன்’ படத்தின் பதாகையை வெளியிட்ட விஜய் சேதுபதி

Share

தமிழ்த் திரைப்படங்களில் முக்கியத் துணை வேடங்களில் நடித்து பிரபலமானவர் அருள்தாஸ். தற்போது இவரது நடிப்பில் ‘ரீயூனியன்’ படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் அருள்தாஸ் நடித்துள்ளார். அகில் சந்தோஷும் நடிக்கும் இப்படத்தை சத்ஸ் ரெக்ஸ் இயக்கியுள்ளார். படத்தின் முதல்காட்சி பதாகையை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். இப்படத்தில் அருள்தாஸ், அகில் சந்தோஷ் தவிர, ஜெயக்குமார், அனுபமா குமார், பர்வீன், சுப்ரமணியன், ஜெமினி மணி, சிவம், சேதுபதி ஜெயச்சந்திரன், கராத்தே ராஜா, பூவையார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.