LOADING

Type to search

சினிமா

அருள்நிதியின் “அருள்வான்” படம் ஜூலை 17ம் தேதி வெளியாகிறது

Share

கணேஷ் விநாயக் இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘அருள்வான்’ படம் ஜூலை 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அருள்நிதி. இவர் ‘வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13, டிமாண்டி காலனி 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, தகராறு, வீர சிவாஜி, தேன் படங்களை இயக்கியவர் கணேஷ் விநாயக். இவரது இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அருள்வான்’. ரம்யா பாண்டியன், காளிவெங்கட், ஆரவ், கிருத்திகா மற்றும் ஜான்விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 2013 ஆம் ஆண்டு வெளியான ‘தகராறு’ படத்திற்குப் பிறகு, அருள்நிதி மற்றும் கணேஷ் விநாயகம் இந்த படத்தின் மூலமாக மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தின் முதல்காட்சி பதாகை வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. இந்த நிலையில், தணிக்கை வாரியம் ‘அருள்வான்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் ஜூலை 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.