LOADING

Type to search

உலக அரசியல்

ஆப்கானிஸ்தானில் பள்ளியில் குண்டு வெடிப்பு தாக்குதலில் 50 மாணவர்கள் படுகாயமடைந்தனர்

Share

ஆப்கானிஸ்தானில் பள்ளியில் குண்டு வெடிப்பு தாக்குதலில் 50 மாணவர்கள் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேவேளை, தலிபான்களுக்கு எதிராக கிளர்ச்சிக்குழுக்களும், பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் அவ்வப்போது குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபுல் அருகே உள்ள டேஷ் இ பெர்ஷி மாவட்டம் மெஹ்தியா பகுதியில் பள்ளிக்கூட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் மாணவ – மாணவியர் 50 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியது யார்? எந்த பயங்கரவாத அமைப்பு? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.