LOADING

Type to search

உலக அரசியல்

இந்தியா வரிவிதிப்பு உலகிலேயே அதிகம் – அமெரிக்கா

Share

அமெரிக்கா வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டுக்கான தேசிய வர்த் தக மதிப்பீட்டு அறிக்கையில், இந்தியாவில் அதிகப்படியான இறக்குமதி வரிகள் மற்றும் வர்த்தகத் தடைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகின் முக்கிய பொருளாதார நாடுகளில் இந்தியாவில்தான் இறக்குமதி வரி மிக அதிகமாக இருப்பதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக வேளாண் பொருட்களுக்கான சராசரி வரி 113.1 சதவீதம் ஆக உள்ளது. மதுபானங்கள் 150 சதவீதம்வரையும் காபி மற்றும் உலர் திராட்சை 100 சதவீதமும் ஆப்பிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் 50 சதவீதமும் வரி விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.