LOADING

Type to search

இந்திய அரசியல்

இன்றைய தலைமுறையினரை எந்தவிதத்திலும் தவறாக வழி நடத்தி விடக்கூடாதென சரத்குமார் கூறியுள்ளார்

Share

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பை சேர்ந்தவர்கள் டில்லியில் 6-ம் தேதி போராட்டம்  நடத்தினர். இதில் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை கண்டித்து பாஜகாவின் நிர்வாகி சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில் அவர் கூறியதாவது: கடந்த 2026 தேர்தலுக்கு பிறகு சமுக வளைதளங்களில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பெரு வாரியான மக்கள் போலியான கணக்குகளை தொடங்கி அதில் தங்கள் கருத்துகளை வெளியிடுவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். சமீப காலங்களாக நாட்டின் நடைபெற்று வரும் நிகழ்வுகள் பொருளாதாரத்தை பாதிப்பதாக கூறினார். தனது எண்ணங்களை பகிர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும். முன்னெப்போதும் இல்லாத அளவிலான போராட்டங்கள் சமுக ஊடகங்கள் தாக்கம் குறித்து ஆழ்ந்த சிந்தனையை எற்படுத்துவதாக அறிக்கையிலே தெரிவித்து இருக்கிறார். உலக அரங்கில் வலிமையுடன் முன்னேறி  உலக தலைமை நாடாக உருவெடுக்கும் பாதையில் பயணித்து வரும் வேலையிலே இந்த வளர்ச்சியை உலக நாடுகள் கவனித்து கொண்டு இருக்கிற நேரத்தில் அவசியமற்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் பகிர படுவதாகவும். அதிலும் முக்கியமாக கருதுவது சமூக ஊடகங்களின் தாக்கமும் உலகிலயே அதிக இளைஞர்களை கொண்ட இந்தியாவில் இன்றைய தலைமுறையினரை  எந்தவிதத்திலும் தவறாக வழி நடத்தி விடக்கூடாது. அரசு ஒரு திட்டத்தை அறிவிக்கும் போது அது மக்களுக்கு தேவையானாத இல்லை என்றால் போது அரசியல் அமைப்பு சட்டத்தின் வாயிலாக நீதிமன்றத்தை அணுகி நீதியை பெற வேண்டுமே தவிற சமுக வலைதளங்களில் அதை பகிர விட்டு மக்களை தூண்டும் விதமாக கருத்துகளை பதிவு செய்து சட்டம் நீதியை மறைக்க செய்வது அது மட்டுமின்றி இந்த கருத்தை பொருந்தது நிலையில் இளைஞர்களின் சக்தி வீணடிக்கப்படாமல் நாட்டின் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.