LOADING

Type to search

உலக அரசியல்

ஈரானை கொடூரமாக தாக்குவோமென டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்

Share

 ஈரான் மீது கொடூரமான தாக்குதல் நடத்துவோமேன அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஈரான், அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், உலகின் மிகவும் முக்கிய கடல்வழி வர்த்தக பாதையான ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்ததுடன் அவ்வழியாக சென்ற கச்சா எண்ணெய், சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் ராணுவ கட்டமைப்புகள், உள்கட்டமைப்புகள் உள்ளிட்டவை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில், ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து 13வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் மீது கொடூரமான தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஈரான் போதுமான வலியை உணர்ந்ததாக தெரியவில்லை. இதனால், ஈரான் மீது இன்னும் கொடூரமான மிகப்பெரிய தாக்குதலை நடத்த உத்தவிட உள்ளேன். ஈரான் ஆதரவுபெற்ற ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்கான கடுமையான தண்டனையை ஈரானும், ஹவுதிக்களும் சந்திப்பார்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.