ஈரான் ஒரு இயல்பான நாடு அல்ல – டிரம்ப்
Share
ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா போர் தாக்குதலை தொடங்கிய ஈரான் ராணுவம், வளைகுடா பகுதியில் உள்ள அண்டை நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.
சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த கடுமையான போர் தாக்குதல் காரணமாக உலகளவில் கடும் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கிடையே போரை நிறுத்த ஈரான் உடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக போரை காலவரையின்றி நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்ரூத் சமூக வலைதளத்தில் கூறியதாவது: மூன்று உலகத்தரம் வாய்ந்த அமெரிக்க போர்க்கப்பல்கள், எதிரிகளின் தாக்குதலுக்கு மத்தியிலும், ஹார்முஸ் நீரிணை வழியாக மிக வெற்றிகரமாக கடந்து சென்றன. அந்த மூன்று போர்க்கப்பல்களுக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை; ஆனால் ஈரானிய தாக்குதல்தாரர்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. தங்கள் கடற்படை முற்றிலுமாக செயலிழந்த நிலையில், அதற்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டு வந்த எண்ணற்ற சிறிய படகுகளுடன் அமெரிக்கவின் பதில் தாக்குதலில் படகுகளும் முழுமையாக அழிக்கப்பட்டன. அந்தப் படகுகள் மிக விரைவாகவும், மிக திறம்படவும் கடலின் ஆழத்திற்கு மூழ்கி சென்றன. எங்கள் போர்க்கப்பல்களை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகள், மிக எளிதாக இடைமறித்து வீழ்த்தப்பட்டன. அதேபோல, தாக்குதலுக்கு வந்த ஆளில்லா விமானங்கள், வானிலேயே வைத்து தீக்கிரையாக்கப்பட்டன. அவை கடலை நோக்கி மிக அழகாக கீழே விழுந்தன. அது ஒரு வண்ணத்துப்பூச்சி தன் கல்லறை நோக்கி மெல்லப் பறந்து விழுவதைப் போலவே! ஒரு இயல்பான நாடு என்றால், இந்த போர்க்கப்பல்களைத் தடையின்றி செல்ல அனுமதித்திருக்கும்.
ஈரான் ஒரு இயல்பான நாடு அல்ல. அந்த நாடு ‘பைத்தியக்காரர்களால்’ வழிநடத்தப்படுகிறது; ஒருவேளை அவர்களுக்கு அணு ஆயுதத்தை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தால், எவ்வித சந்தேகமும் இன்றி அவர்கள் அதைச் செய்து முடிப்பார்கள். அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு ஒருபோதும் கிடைக்காது. இன்று நாங்கள் அவர்களை எப்படி தோற்கடித்தோமோ, அதேபோலவே அவர்கள் தங்கள் ஒப்பந்தத்தை ‘விரைவாக’ கையெழுத்திட தவறினால், எதிர்காலத்தில் அவர்களை இன்னும் மிகக் கடுமையாகவும், மிக தீவிரமாகவும் நாங்கள் தாக்கி வீழ்த்துவோம். எங்கள் மூன்று போர்க்கப்பல்களும், அவற்றில் பணியாற்றும் அற்புதமான வீரர்களுடன் இணைந்து, இப்போது எங்கள் கடற்படை முற்றுகை அணியுடன் மீண்டும் இணையவுள்ளன. அந்த முற்றுகை அணி என்பது உண்மையில் ஒரு “இரும்பு சுவர்” போன்றதாகும். இவ்வாறு அதில் தெரிவித்தார்.















