LOADING

Type to search

இந்திய அரசியல்

உத்தரகாண்ட், மராட்டியத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – மக்கள் பீதி

Share

மராட்டியத்தில் காலை 8.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் 4.7 ஆக பதிவாகி உள்ளது. இதன் காரணாமாக மராட்டியத்தில் பர்பானி, நாந்தேடு , ஹிங்கோலி, வாஷிம் மற்றும் யவத்மால் ஆகிய பகுதிகளில் லேசான நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . சில இடங்களில் , நிலநடுக்கத்தின் தீவிரம் காரணமாக , வீடுகளின் கூரைகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன மற்றும் வீடுகளின் கூரைகள் நகர்ந்துள்ளன . இந்த நிலநடுக்கம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . இதனை தொடர்ந்து, மராட்டியத்தில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுத்துள்ளது. இந்த நிலநடுக்கம் மாலை 4.22 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகி உள்ளது. முன்னதாக, உத்தரகாண்டிலும் இன்று ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் அதிகாலை 5.2 மணியளவில் ரிக்டர் 3.3 அளவில் பதிவாகி உள்ளது. இதனையடுத்து காலை 6.29 மணியளவில் ரிக்டர் 3.6 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதை தவிர, நாகாலாந்திலும் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அதிகாலை 5.22 மணியளவில் 2.7 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.