LOADING

Type to search

இந்திய அரசியல்

எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி வேலுமணி, சிவி சண்முகம் சந்திப்பு

Share

 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. த.வெ.க.விற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தரப்பிலும் குரல் எழுந்துள்ளது. இந்த நிலையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும் தற்போது எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள சி.வி. சண்முகத்தின் உறவினர் வீட்டில் காலை தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி எம்.எல்.ஏ., பவானி தொகுதி எம்.எல்.ஏ. கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசித்தனர். இந்த ஆலோசனை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இந்த ஆலோசனை நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது.