LOADING

Type to search

இந்திய அரசியல்

எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு

Share

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கி இருக்கும் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் தம்பிதுரை எம்.பி. ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கே.பி.முனுசாமி, சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சுமார் 1/2 மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது 4-ந் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்தும், அதன் பின்பு மேற்கொள்ள வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.